×

நடிப்புக்கு முழுக்கா? டாக்டர் ஆகிவிட்டாரா அதிதி ஷங்கர்?

சென்னை: முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர், தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படம், ராம்குமார் இயக்கும் அடுத்தப்படம் என அதிதி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். ‘விருமன்’ படத்தின் மதுரை வீரன் பாடலை பாடியிருந்த இவர், மாவீரன் படத்திலும் ஒரு பாடலை பாடியிருந்தார். இதனிடையே அதிதி கழுத்தில் டேக், மருத்துவர் உடை, முகத்தில் மாஸ்க், தலையில் கேப் அணிந்து ஒரு மருத்துவராக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு டாக்டர் ஏ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மருத்துவ படிப்பு முடித்துள்ள அதிதி, விருப்பத்தின் பேரில் சினிமாவில் நடிக்க வந்தவர். ஆனால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிதி டாக்டர் தொழிலுக்கு சென்றுவிட்டாரா, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டாரா அல்லது டாக்டர் தொழிலை பார்த்துக்கொண்டே நடிப்பாரா, இல்லாவிட்டால் இது படத்துக்கான கெட்அப்பா என்றெல்லாம் நெட்டிசன்கள் கேட்கிறார்கள். ஆனால் அதிதி அமைதி காக்கிறார்.

The post நடிப்புக்கு முழுக்கா? டாக்டர் ஆகிவிட்டாரா அதிதி ஷங்கர்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aditi Shankar ,Chennai ,Muthaiya ,Shankar ,Sivakarthikeyan ,Vishnuvarthan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராஜேஷ் எம். இயக்கத்தில் அதர்வா, அதிதி