×
Saravana Stores

அண்ணன், தம்பி ஜோடியாக அதிதி ஷங்கர்

சென்னை: இயக்குனர் ஷங்கரின் இளைய மகளும், மருத்துவம் படித்து பட்டம் பெற்றவருமான அதிதி ஷங்கர், கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்தார். சில படங்களில் பின்னணியும் பாடியுள்ள அவர், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் ‘நேசிப்பாயா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் அவர், ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன்தான் ஆகாஷ் முரளி. இந்நிலையில், அவரது அண்ணன் அதர்வா முரளி ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், அதிதி ஷங்கர். வாரி பிலிம் தயாரிக்கும் இப்படத்தை ராஜேஷ்.எம் இயக்குகிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

The post அண்ணன், தம்பி ஜோடியாக அதிதி ஷங்கர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aditi Shankar ,CHENNAI ,Shankar ,Karthi ,Sivakarthikeyan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அர்ஜுன் தாஸ் அதிதி ஷங்கர் நடிக்கும் ஒன்ஸ்மோர்