×

பாடகருடன் மிருணாள் டேட்டிங்: ஷில்பா ஷெட்டி பார்ட்டியில் அம்பலம்

மும்பை: ஷில்பா ஷெட்டி வைத்த பார்ட்டியில் நடிகை மிருணாள் தாக்கூர், பாடகர் பாட்ஷாவுடன் வந்ததால், இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சார்பில் சமீபத்தில் தீபாவளி பார்ட்டி வைக்கப்பட்டது. அந்த பார்ட்டியில் நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் பாடகர் பாட்ஷா ஆகியோர் ஒன்றாக காணப்பட்டனர். சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த மிருணாள், இப்போது நானியுடன் ஹய் நன்னா படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் மிருணாளும் பாட்ஷாவும் ஒன்றாக வந்ததால், அவர்கள் ‘டேட்டிங்’-யில் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இருவரும் கைகோர்த்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், ‘இவர்கள் ஜோடியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை’ என்றும், ‘மிருணாள் தாக்கூரா? இவருடனா?’ என்றும், ‘இது உண்மையாக இருக்காது’ என்றும், ‘குட் பாய் பேட் கேர்ள்’ என்றும் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாடகர் பாட்ஷா வெளியிட்ட ‘பேட் பாய் அண்ட் பேட் கேர்ள்’ என்ற ஆல்பத்தில் மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாட்ஷா தனது காதலியான இஷா ரிக்கியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. அதற்குள் தற்போது மிருணாள் தாக்கூருடன் பாட்ஷா ஜோடியாக இருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாடகருடன் மிருணாள் டேட்டிங்: ஷில்பா ஷெட்டி பார்ட்டியில் அம்பலம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mrinal ,Shilpa Shetty ,Mumbai ,Mrinal Thakur ,Badshah ,Bollywood ,Diwali ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கங்கனாவின் வீடுகளை வாங்கினார் மிருணாள்