×

16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சாரா

சென்னை: தெய்வத்திருமகள் படத்தில் நடித்த பிறகு, சாரா ‘சைவம்’ படத்திலும் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்தார். தெய்வத்திருமகள் படத்தில் மிகவும் சிறிய குழந்தையாக இருந்த இவர், இந்த படத்தில் கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக காண்பிக்கப்பட்டார். இவர், பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகளாவார். இவரது தாயும் பரத நாட்டிய கலைஞர். தந்தை மூலமாக திரையுலகிற்குள் வந்த இவர், தற்போது நன்கு வளர்ந்த பெரிய பெண்ணாக மாறிவிட்டார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் இளம் வயது நந்தினியாக நடித்து மீண்டும் ஒருமுறை தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். 18 வயது நிரம்பிய சாரா அர்ஜுன், தன்னை விட 16 வயது மூத்த நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர், விஜய் தேவரகொண்டா. தமிழ் ரசிகைகள் மத்தியிலும் விஜய் தேவரகொண்டா மிகவும் பிரபலம். விஜய் தேவரகொண்டாவை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களும் அறிந்து கொண்டனர். இவர், தற்போது தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோவாக உள்ளார். விஜய் தேவரகொண்டாவிற்கு தற்போது 34 வயதாகிறது. இவரையும் சாரா அர்ஜுனையும் வைத்து காதல் கதை ஒன்று தயாராகி வருகிறதாம். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் கவுதம் இயக்குகிறாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் புதிய தகவலாக வெளியாகியுள்ளது.

The post 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sarah ,Chennai ,Raj Arjun ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...