×

கருப்பர் நகரம் டீசர் வெளியானது

சென்னை: நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கியுள்ள படம் ‘கருப்பர் நகரம்’. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி, ஈஸ்வரி ராவ், ஜான்விஜய், டேனியல், சூப்பர் சுப்பராயன், கல்லூரி வினோத், தீபா உள்பட பலர் நடித்த இந்த படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கேஎஸ் பிரசாத் என்பவர் இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸரில் ’உலகம் முழுவதும் ஒரே சண்டை தான் வேளாங்கண்ணி, 100 பேர் பாடுபட்டு ஒருத்தன் திங்கறதா, இல்ல 100 பேர் பாடுபட்டு 100 பேர் பங்கு போட்டுக்கிறதா என்பதுதான், உடம்புல ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும், உன் உடம்பில் ரத்தம் சூடா இருக்கு, நீ தான் செய்யணும்’ என்ற வசனத்துடன் முடியும் இந்த டீசர் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து
காணப்படுகிறது.

The post கருப்பர் நகரம் டீசர் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Gobi Nayanar ,Nayanthara ,Jay ,Aishwarya Rajesh ,JD Chakraborty ,Ishwari Rao ,Janvijay ,Daniel ,Super Subparayan ,Kolej Vinod ,Deepa ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!