×

போலி வீடியோ – 3 ஆண்டுகள் சிறை

டெல்லி: போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நேற்று, நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு செல்வது போல மார்பீங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. அது மார்பீங் செய்யப்பட்ட வீடியோ என்று கூட தெரியாமல் பலரும் ராஷ்மிகா இப்படியா உடை அணிவீர்கள் என்பது போல கேள்வி எழுப்பினார். பிறகு அமிதாப் பச்சன் தனது x வலைதள பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா குறித்து பரவும் வீடியோ போலி இப்படி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பிறகு, ராஷ்மிகா மந்தனாவும் இந்த மார்பீங் வீடியோ குறித்து வருத்தத்துடன் விளக்கம் கொடுத்திருந்தார். நாகசைதன்யா, சின்னமையி, கே.கவிதா உள்ளிட்ட பலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில், இனிமேல் இப்படி தவறாக மார்பீங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். போலி வீடியோ தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

The post போலி வீடியோ – 3 ஆண்டுகள் சிறை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Delhi ,Union Government ,Rashmika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசு துறைகளையும் காவிமயமாக்குவதா?: தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம்