- அரசு நேரடி கொள்முதல் மையம்
- பொல்பான்கரணை கிராமம்
- செல்வம்
- மதுராந்தகம்
- பொல்பனங்கரணை
- ஆச்சிருபாக்கம்
- தின மலர்
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே பொற்பனங்கரணை கிராமத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்பி செல்வம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பொற்பனங்கரணை கிராமத்தில் கடந்த பருவமழையின்போது ஏரி கிணறு உள்பட நீர் நிலைகள் நிரம்பின. இதனால், மகிழ்ச்சியடைந்த ஏராளமான விவசாயிகள், நெற்பயிர் நடவு செய்தனர். அதன் அறுவடை தற்போது அப்பகுதியில் களைகட்டியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்தில் விவசாயிகள் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய, திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, பொன்மலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சம்பத் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எம்பி செல்வம் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.இதில் திமுக மாவட்ட பொருளாளர் கோகுலக்கண்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் ரத்தினவேல், பேக்கரி ரமேஷ், கவுன்சிலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்….
The post பொற்பனங்கரணை கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம்: எம்பி செல்வம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

