×

காரில் கள்ளச்சாராயம் கடத்திய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை: திருத்தணி கோர்ட் தீர்ப்பு

திருத்தணி: காரில் கள்ளச்சாராயம் கடத்திய வாலிபருக்கு திருத்தணி நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கடந்த 17.10.2015 அன்று திருத்தணி – சித்தூர் சாலையில் உள்ள வீரகுப்பம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், 3 சாக்கு மூட்டைகள் இருந்தது. அனைத்தையும் பிரித்து பார்த்தபோது அதில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது.இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அயன் கண்டிகை கிராமம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி(32) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருத்தணி சப்-கோர்ட் நீதிபதி காயத்ரி தேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு  வந்தது. இதில் நீதிபதி, ராமமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் லட்சுமணன் ஆஜராகி வாதாடினார்….

The post காரில் கள்ளச்சாராயம் கடத்திய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை: திருத்தணி கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Trithani Court ,Thiruthani ,Thiruthani court ,R. K. Petta ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...