×

சின்னஞ்சிறிய பச்சோந்தி!

மடகாகஸ்கரில் உலகின் மிகச் சிறிய பச்சோந்தி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1.4 செ.மீ நீளமுள்ள இதுதான் ஊர்வன இனத்திலேயே மிகச் சிறியது என்றும் கருதப்படுகிறது. ஒருவரின்  விரலின் உச்சியில் வைத்தால் கிட்டதட்ட அதன் அகலம்தான் இருக்கும். இதனை ப்ரூகேசியா நானா என்கிறார்கள். இந்த ப்ரூகேசிய வகைகளில் மட்டும் இந்த நிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள்  உள்ளதாம். மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சோந்தி இனங்களில் உள்ளனவாம். ஒரு வெட்டுக்கிளியை விட சிறிதாக, ஒரு ஆஸ்பிரின் மாத்திரை அளவுக்கே உள்ள இந்த சிற்றுயிர் காடுகள் வேகமாக  அழிந்து வருவதால் வேகமாக அழியும் உயிரினங்களில் ஒன்றாகவும் இருக்கிறது என்கிறார்கள்….

The post சின்னஞ்சிறிய பச்சோந்தி! appeared first on Dinakaran.

Tags : Madagascar ,
× RELATED மடகாஸ்கர் மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலி