×

ரசிகர்கள் தள்ளுமுள்ளு லோகேஷ் கனகராஜ் காயம்

திருவனந்தபுரம்: லியோ பட புரமோஷனுக்காக பாலக்காடு வந்தபோது ரசிகர்கள் பெருமளவு திரண்டதால் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் காலில் காயம் ஏற்பட்டது. விஜய் நடித்த லியோ படம் கேரளாவில் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக டைரக்டர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். நேற்று பாலக்காட்டிலுள்ள அரோமா என்ற தியேட்டருக்கு லோகேஷ் கனகராஜ் சென்றார். படக்குழுவினர் வருவது குறித்து அறிந்ததும் தியேட்டர் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ரசிகர்களிடையே சிக்கிக்கொண்ட லோகேஷ் கனகராஜின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் பாலக்காடு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின் அவர் கோவை திரும்பினார். தனக்கு லேசான காயம் தான் ஏற்பட்டது என்றும், விரைவில் மீண்டும் கேரளாவுக்கு ரசிகர்களை சந்திக்க வருவேன் என்றும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

The post ரசிகர்கள் தள்ளுமுள்ளு லோகேஷ் கனகராஜ் காயம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lokesh Kanagaraj ,Thiruvananthapuram ,Palakkad ,Leo ,Vijay ,Kerala ,Kollywood Images ,
× RELATED நடிகர் ஆனார் லோகேஷ் கனகராஜ்