×

வரும் 26ம் தேதி ஓடிடியில் சந்திரமுகி 2

சென்னை: லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, பி.வாசு எழுதி இயக்கிய 65வது படமாக ‘சந்திரமுகி 2’ படம் உருவானது. கடந்த 2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு நடித்து வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘சந்திரமுகி’. இதன் 2ம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகி, கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி திரைக்கு வந்தது.

இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா கிருஷ்ணன், ரவிமரியா நடித்திருந்தனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்த இப்படம் வரும் 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

The post வரும் 26ம் தேதி ஓடிடியில் சந்திரமுகி 2 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,P. Vasu ,Subashkaran ,Lyca Productions ,P.Vasu ,Rajinikanth ,Jyothika ,Nayanthara ,Prabhu ,Vadivelu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...