×

வித்தைக்காரன் பாடல் வெளியீடு

சென்னை: காமெடி வேடங்களில் நடித்து வந்த சதீஷ், திடீரென்று ‘நாய் சேகர்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். பிறகு மீண்டும் காமெடி வேடத்தில் நடித்து வந்த அவர், தற்போது மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கும் படம், ‘வித்தைக்காரன்’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘லைஃப் இஸ் மேஜிக்’ என்ற பாடலை விஷால், ஆர்யா இணைந்து வெளியிட்டனர். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்க, வெங்கி எழுதி இயக்கியுள்ளார்.

அதிரடியான கொள்ளைச் சம்பவ பின்னணியில் நடக்கும் விஷயங்களுடன் முழுநீள பிளாக் காமெடி படமாக உருவாகி இருக்கிறது. ஹீரோயினாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஆனந்தராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிப் அலி, பாவெல் நவகீதன்,
ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து நடித்து இருக்கின்றனர். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.பி.ஆர் இசை அமைத்துள்ளார். சென்னையின் முக்கிய பகுதி களில் ஷூட்டிங் நடந்துள்ளது.

The post வித்தைக்காரன் பாடல் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Juggler ,Chennai ,Sathish ,Shekhar ,Vidhaikaran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்