×

கேம் சேஞ்சர் முதல் பாடல் வெளியாகிறது

ஐதராபாத்: ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் அடுத்த வருடம் ஆகஸ்ட் 15ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் முதல் பாடல், தசராவை முன்னிட்டு வரும் 22 அல்லது 23ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

The post கேம் சேஞ்சர் முதல் பாடல் வெளியாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,Shankar ,Ram Charan ,Kiara Advani ,Anjali ,SJ Surya ,Samuthirakani ,Naveen Chandra ,Jayaram ,Sunil ,Venkateswara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கஞ்சா சங்கர் பூஜா ஹெக்டே படத்துக்கு எச்சரிக்கை