×

வாலிபரின் காதலை நிராகரித்த ரம்யா பாண்டியன்

சென்னை: வாலிபர் ஒருவர் தன்னை 3 வருடமாக பின் தொடர்ந்ததாகவும் அவரது காதலை நிராகரித்துவிட்டதாக ரம்யா பாண்டியன் கூறியுள்ளார். நடிகர் அருண் பாண்டியனின் சகோதரர் மகள் ரம்யா பாண்டியன். புடவையில் இடுப்பு மடிப்பு தெரிய இவர் கொடுத்த கவர்ச்சி போஸ் வைரலானது நினைவிருக்கலாம். தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, தினமும் கல்லூரிக்கு போகும்போது பேருந்து நிலையத்தில் ஒருவர் நின்று கொண்டு இருப்பார். கல்லூரிவிட்டு திரும்பி வரும்போதும் நின்று கொண்டு இருப்பார். இப்படியே மூன்று வருடமாக என்னை அவர் ஃபாலோ செய்து கொண்டே வந்தார்.

ஒரு நாள் அவர் என்னிடம் காதலை சொல்லி ப்ரபோஸ் செய்தார். மனசுக்குள் பயம் இருந்தாலும், வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல், முடியாது என்று சொல்லிவிட்டேன். அவர் 3 வருடமாக எனக்காக காத்திருந்தாலும் எனக்கு அவர் மீது காதல் வரவில்லை. அதனால்தான் அந்த காதலை நிராகரித்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

The post வாலிபரின் காதலை நிராகரித்த ரம்யா பாண்டியன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ramya Pandyan ,Chennai ,Ramya Pandian ,Ramya Pandiyan ,Arun Pandiyan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...