×

தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட திருக்கோயில் இணையதளங்கள் ஒரு வார காலத்திற்குள் மூட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள திருக்கோயில் இணையதளங்கள் ஒரு வார காலத்திற்குள் மூட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரையின்படி, அனைத்து துறைகளும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் திருக்கோயில்கள் நிர்வாகத்தை கணினிமயமாக்கும் பொருட்டு ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டம் எனப்படும் தகவல் தொழில்நுட்ப திட்டம் தேசிய தகவல் மையம் (NIC) வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ஒவ்வொரு திருக்கோயில்களின் தகவல்களுடன் கூடிய வலைதளம் NIC வாயிலாக ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு  வருகிறது. சில திருக்கோயில்கள் ITMS  திட்டம் துவங்குவதற்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் வலைதளம் உருவாக்கி, அதனை தற்போது வரை பராமரித்து வருவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தகைய வலைதளங்கள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தரவுகள் hackers மூலம் தவறாக பயன்படுத்துவதற்கும். பக்தர்களின் தரவுகள் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோயில்களின் இணைய தளமும் NIC நிறுவனம் மூலம் மட்டுமே உருவாக்கி பராமரிக்கப்பட வேண்டும். திருக்கோயில் தொடர்பான அனைத்து தரவுகளும்  போர்ட்டல் மூலமாக NIC நிறுவனம் மூலம் உருவாக்கப்படும் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள திருக்கோயில் இணையதளங்கள் ஒரு வார காலத்திற்குள் மூடப்பட வேண்டும்.  திருக்கோயில் தொடர்பாக ஏதேனும் புதிய சிறப்பு சேவைகள் தேவைப்படின் அது தொடர்பாக ழிமிசி நிறுவனம் மூலமாக மட்டுமே உருவாக்கப்பட வேண்டும். முதுநிலை திருக்கோயில்கள் செயல் அலுவலர்கள் இந்த சுற்றறிக்கை பெறப்பட்ட ஒருவார காலத்திற்குள் தனியார் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ள திருக்கோயில் இணையதளங்கள் மூடப்பட்டு ழிமிசி நிறுவனம் மூலம் உருவாக்கி பராமரிக்க வேண்டும். முதுநிலை அல்லாத திருக்கோயில்களை மண்டல இணை ஆணையர்கள் இது தொடர்பாக திருக்கோயில் செயல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அறிவுரை வழங்கியுள்ளார்….

The post தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட திருக்கோயில் இணையதளங்கள் ஒரு வார காலத்திற்குள் மூட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Fisheries Department ,Thirukoil ,Chennai ,Hindu Religious Foundation ,Tirukoil ,The Hindu Religious Fisheries ,Thirukkoil ,Dinakaran ,
× RELATED மதுரை கூடலழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.10.91 லட்சம்