×

தனுஷ் படத்தில் சஸ்பென்ஸ் கேரக்டரில் அதிதி

சென்னை: தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் சஸ்பென்ஸ் கேரக்டரில் அதிதி பாலன் நடிப்பது உறுதியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக் காயிதம்’, பாரதிராஜா, வசந்த் ரவி நடித்த ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் அதிதி பாலன் நடிப்பது உறுதியாகியுள்ளது. ‘அருவி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி பாலன். பிறகு சில படங்களில் நடித்த இவர், மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். கடைசியாக தங்கர்பச்சான் இயக்கிய ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பெண் போராளி கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

The post தனுஷ் படத்தில் சஸ்பென்ஸ் கேரக்டரில் அதிதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aditi ,Dhanush ,Chennai ,Aditi Balan ,Miller ,Sathya Jyothi Films ,Priyanka Mohan ,Sivarajkumar ,Samuthirakani ,Selvaraghavan ,Keerthy Suresh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருப்பதி நகரில் சுகாதாரத்துறை...