×

குடியிருப்பு பகுதியில் நுழைந்து தடுப்புச்சுவரை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம்

குன்னூர் :  குன்னூரில் முகாமிட்டுள்ள ஒன்பது யானைகள் உலிக்கல் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்புகளின் தடுப்புச்சுவரை இடித்து சேதப்படுத்தியது.குன்னூரில் கடந்த சில வாரங்களுக்கு மேலாக குட்டியுடன் ஒன்பது யானைகள் முகாமிட்டுள்ளன. கிளண்டேல், சின்னக்கரும்பாலம், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில்  இருந்த வாழை உள்ளிட்டவற்றை  உண்டு சென்றது. தொடர்ந்து  கிளண்டேல் குடியிருப்பு பகுதியில் உலா வந்தது.இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தினசரி பணிக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர்.  தொடர்ந்து குட்டியுடன் யானைகள் அங்கிருந்து இடம் பெயர்ந்து குன்னூரில் உலிக்கல் அருகே முகாமிட்டுள்ளது. நள்ளிரவில் உலிக்கல் பகுதிக்குள் புகுந்த யானைகள் பாலன் என்பவரது வீட்டின் கேட்டினை உடைத்து, சுற்றுச்சுவரை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த மரங்கள் மற்றும் பொருட்களை சேதம் செய்யது. அங்கிருந்து வெள்ளாளமட்டம் பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கிருந்த வாழைகளை சேதம் செய்தது.  தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் விரைவில் யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குடியிருப்பு பகுதியில் நுழைந்து தடுப்புச்சுவரை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Kunnur ,Thikal ,Catakasam ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இன்று...