×

வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின்

சென்னை: ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ், இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படத்துக்கு தற்காலிகமாக ‘விஆர்07’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சபரிஷ் நந்தா இயக்க, அஜ்மல் தஹ்சீன் இசை அமைக்கிறார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுனில், கல்யாண் மாஸ்டர், அனிகா சுரேந்திரன் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கியது. கடந்த 11ம் தேதி முழுமையாக முடிவடைந்தது. கிரைம் திரில்லர் படமான இது திரைக்கு வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது. தெலுங்கு, இந்தி, தமிழ், பஞ்சாபி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் மெஹ்ரின் பிர்சாடா, இதற்கு முன்பு தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், கதைக்கு அவரது காட்சிகள் பொருந்தவில்லை என்று, அவரது காட்சிகள் முழுவதையும் படத்தில் இருந்து நீக்கியதாக அப்போது சுசீந்திரன் தெரிவித்தார். பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் ‘நோட்டா’, தனுஷுடன் ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்த மெஹ்ரின் பிர்சாடா, தற்போது ‘ஸ்பார்க்’ என்ற தமிழ், தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

The post வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mehrin ,Vasant Ravi ,CHENNAI ,AR Zafar Sadiq ,JSM Pictures ,Irrban Malik ,Entertainment ,Sabarish Nanda ,Ajmal Tahseen ,Prabhu Raghav ,Vasanth Ravi… ,Vasanth Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...