×

‘லியோ’ படக்குழு திருப்பதியில் சாமி தரிசனம்

வரும் அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இணை தயாரிப்பாளர் ஜகதீஷ் மற்றும் உதவி கதையாசிரியர் ரத்னகுமார் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர். கோவிந்தா கோஷம்: கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே செல்லும் காட்சிகளை ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு பெரிய கும்பலுடன் திருப்பதி மலையில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ரத்னகுமார் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவிந்தா கோஷத்துடன் படக்குழுவினர் நடை பயணம் மேற்கொண்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

The post ‘லியோ’ படக்குழு திருப்பதியில் சாமி தரிசனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sami ,Lokesh Kanakaraj ,Jagadesh ,Ratnagumar ,Govinda ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எங்களின் ஸ்பெஷாலிட்டி சாமி...