×

சென்சாரில் 60 ‘கட்டுகள்’ வாங்கிய படம்

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஒடியா ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றியவர், கேஷவ் தெபுர். மேலும் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு நடனப் பயிற்சி அளித்திருந்த பிரேம் ரக்‌ஷித் ஆகியோரிடம் உதவி நடன இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு மொழிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடினார். தற்போது அவர் இயக்குனராகும் படம், ‘ரா… ரா… சரசுக்கு ரா… ரா…’. லேடீஸ் ஹாஸ்டலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.வி இசை அமைத்துள்ளார். கார்த்திக், காயத்ரி பட்டேல், பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி, ஜெஃபி, ஜெயவாணி, அக்‌ஷிதா நடித்துள்ளனர். படம் குறித்து ஏ.ஜெயலட்சுமி கூறுகையில், ‘இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடந்து முடிகிறது. இதில் இளைஞர்களும், இளைஞிகளும் பேசி நடித்த காட்சிகளையும், வசனங்களையும் பார்த்த சென்சார் குழுவினர், 60 கட்டுகள் கொடுத்தனர். தொடர்ந்து மும்பையில் மறுதணிக்கை செய்யப்பட்டுள்ள இந்தப் படத்தை, வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி 9வி ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது’ என்றார்.

The post சென்சாரில் 60 ‘கட்டுகள்’ வாங்கிய படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Keshav Thepur ,Prabhu Deva ,Raghava Lawrence ,Kollywood Images ,
× RELATED மீண்டும் தமிழுக்கு வந்த சன்னி லியோன்