×

தமிழில் விரைவில் வெளியாகிறது பயர் ட்விஸ்டர்

சென்னை: தமிழில் பல படங்களை வெளியிட்டுள்ள மருதமலை பிலிம்ஸ் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் வழங்கும் புதிய படம், ‘அக்னி அரக்கன்’. திரைக்கு வந்த ‘பயர் ட்விஸ்டர்’ என்ற ஆங்கிலப் படத்தை தமிழில் ‘அக்னி அரக்கன்’ என்ற பெயரில் வெளியிடுகின்றனர். தமிழ் பதிப்புக்கான வசனத்தை தயாரிப்பாளர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் எழுதியுள்ளார்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு பற்றிய ஆபத்துகள் குறித்து சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. வழக்கமான ஆங்கிலப் படங்களின் டப்பிங் மாதிரி இல்லாமல், புதிய தொழில்நுட்ப உதவியுடன் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ‘அக்னி அரக்கன்’ படம் திரைக்கு வருகிறது.

The post தமிழில் விரைவில் வெளியாகிறது பயர் ட்விஸ்டர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Marudamalai Films Racecourse ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்