×

இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி

சென்னை: பாடலாசிரியர் மதன் கார்க்கி இசையமைப்பாளராகி ‘முடிவிலி’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியது: சிறு வயதிலிருந்து இசையில் நாட்டம் இருந்தது. இசையும் கற்று இருக்கிறேன். இசை அமைப்பதற்கான சந்தர்ப்பம் அமைந்ததும் இந்த ஆல்பம் மூலம் இசையமைப்பாளர் ஆகிவிட்டேன். நாளை இந்த ஆல்பம் இணையதளத்தில் வெளியாகிறது. இதில் மொத்தம் 10 பாடல்கள். காதல்தான் அடிப்படை என்றாலும் காதலின் பல்வேறு வகைகள் ஒவ்வொரு பாடலிலும் இருக்கும்.

இந்த பாடல்களை பாடகர்கள் யாரும் பாடவில்லை என்பதுதான் இதில் புதுமை. 10 பாடல்களையும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் குரலை உருவாக்கி பாடல் பதிவு செய்துள்ளேன். இந்த பாணி வெளிநாடுகளில் பயன்படுத்தியுள்ளனர். பிற இந்திய மொழிகளிலும் நடந்திருக்கிறது. தமிழில் இது முதல்முறை. தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் இசை ஆல்பம் உருவாக்குவேன். சினிமாவுக்கு இசை அமைக்கும் எண்ணமில்லை. இவ்வாறு மதன் கார்க்கி கூறினார்.

The post இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Madan Karki ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்; ஜேஎஸ்கே பேட்டி