×

‘அயலான்’ படத்தில் 4,600 விஎப்எக்ஸ் காட்சிகள்: சிவகார்த்திகேயன் தகவல்

சென்னை: ‘இன்று நேற்று நாளை’ படத்தை தொடர்ந்து ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘அயலான்’. சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு ஆகியோருடன் ஏலியன் ஒன்று நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
இந்தியாவின் முதல் ஏலியன் படமாக ‘அயலான்’ உருவாகியுள்ளது. முழு படத்தையும் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘சூப்பர்ப்’ என்று பாராட்டினார். பல வருடங்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருவதால், ஏற்கனவே இசை அமைத்திருந்த சில பாடல்களுக்குப் பதிலாக புதிய பாடல்களை உருவாக்கியுள்ளார்.

இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது அவரது சம்பளம் வேறு, இப்போது அவரது சம்பளம் வேறு. புதிய சம்பளம் வாங்காமல், இப்படம் நன்றாக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், தானாக முன்வந்து இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி. நான் அவரது தீவிர ரசிகன் என்பதால், இப்படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். இப்படத்தின் தாமதத்துக்கு முக்கிய காரணம், கிராபிக்ஸ் பணிகள். டெக்னிக்கல் ரீதியாக எந்த காம்ப்ரமைசும் செய்துகொள்ளக் கூடாது என்பதில் படக்குழுவினர் உறுதியாக இருந்தோம். காரணம், இப்படத்தின் கதை. இன்னும் 10 வருடங்களோ அல்லது 20 வருடங்களோ கழித்துப் பார்த்தாலும், அப்போதுதான் படமாக்கப்பட்டது போல் ரொம்ப பிரெஷ்சாக இருக்கும். இப்படத்தில் 4,600 விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.

வரும் தீபாவளிக்கு ரிலீசாக வேண்டிய ‘அயலான்’, வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அனிமேஷன் மற்றும் சூப்பர் ஹீரோ படங்களின் தீவிர ரசிகனான நான், அதுபோன்ற ஒரு படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. டைரக்டர் ஆர்.ரவிக்குமாரின் நல்ல மனதுக்காகவே ‘அயலான்’ படத்தில் நடித்தேன். அடுத்த படத்திலும் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். அவரது ஐடியாவும், பிலிம் மேக்கிங்கும் என்னை பிரமிக்க வைத்தது. இப்படத்துக்காக அவர் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இது அவர் செய்துள்ள மிகப்பெரிய தியாகம். அதனால்தான் இப்படத்துக்கு எனக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் நடித்த சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர் படமான ‘அயலான்’, எனது ரசிகர்களையும், மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் அதிகமாக ஈர்த்து தியேட்டருக்கு வரவழைக்கும் என்று நம்புகிறேன்.

The post ‘அயலான்’ படத்தில் 4,600 விஎப்எக்ஸ் காட்சிகள்: சிவகார்த்திகேயன் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : R. ,Ravi Kumar ,Shivakarthikayan ,Ragul Preet Singh ,Isha Kopigar ,Karunakaran ,Yogi Babu ,A. R. Rahman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!