×

கிரைம் படத்துக்கு சென்சாரில் 16 ‘கட்’

சென்னை: மதுரியா புரொடக்‌ஷன் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்துள்ள படம், ‘இந்த கிரைம் தப்பில்ல’. தேவகுமார் இயக்கியுள்ளார். பரிமளவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.எம்.எம்.கார்த்திகேயன் இசை அமைத்துள்ளார். பாண்டி கமல், மேக்னா ஹெலன், ஆடுகளம் நரேன், முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேஸி கோபால், காயத்ரி நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி கூறியதாவது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்லும் படம் இது. பாலியல் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுகின்றனர். இதற்கு காரணம், அவர்களுக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஆள் பலம், அரசியல் பலம், பண பலத்தால் அவர்கள் தப்பிக்கின்றனர். எனவே, இவன்தான் குற்றவாளி என்று தெரிந்தவுடன் தண்டிக்க வேண்டும்.

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பவர்களை தண்டிக்க தனி இளைஞர் படை நடத்தி வருகிறார், ஆடுகளம் நரேன். அவரது படையில் இருக்கிறார், ஹீரோ பாண்டி கமல். அப்போது ஆடுகளம் நரேனிடம் உதவி கேட்டு வருகிறார், ஹீரோயின் மேக்னா ஹெலன். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. படத்தைப் பார்த்த சென்சார் குழு, 16 இடத்தில் ‘கட்’ கொடுத்தனர். போஸ்டருக்காக உருவாக்கிய நீதி தேவதையின் ஒரு கையில் அரிவாளும், தராசில் பணமும் இருப்பதாக வடிவமைத்து இருந்தோம். அதை மாற்றச் சொன்னவுடன் மாற்றிவிட்டோம். பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு கடுமையான படமாக, ‘இந்த கிரைம் தப்பில்ல’ உருவாகியுள்ளது.

The post கிரைம் படத்துக்கு சென்சாரில் 16 ‘கட்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Manoj Krishnasamy ,Madhuriya Productions ,Devakumar ,AMM Karthikeyan ,Parimalavasan ,Pandi Kamal ,Meghna Helen ,Aadukalam Naren ,Muthukalai ,Venkal Rao ,Crazy Gopal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...