×

சமுத்திரக்கனி ஜோடியாக அனன்யா

சென்னை: சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமய்யா, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு நடித்துள்ள படம், ‘திரு.மாணிக்கம்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. நந்தா பெரியசாமி கதை எழுதி இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி மூலம் ‘நாடோடிகள்’ படத்தில் அறிமுகமான மலையாள நடிகை அனன்யா, இதில் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். சினேகன், ராஜூ முருகன், சொற்கோ, இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஜி.பி.ரவிகுமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் தயாரித்துள்ளனர். குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு குடும்பமே மாணிக்கத்தை நேர்மையாக இருக்கவிடாமல் துரத்துகிறது. போலீசாரும் அவனை விரட்டுகின்றனர். இதிலிருந்து மாணிக்கம் எப்படி தப்பித்து நேர்மையாக வாழ்கிறான் என்பது கதை. மாணிக்கமாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

The post சமுத்திரக்கனி ஜோடியாக அனன்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ananya ,Samutharakani ,Chennai ,Samuthirakani ,Bharathiraja ,Nasser ,Thambi Ramaiah ,Chinni Jayant ,Sams ,Sriman ,Vadyukkarasi ,Karunakaran ,Illasasu ,Nanda Periyasamy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் 3...