×

ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறினார் சாக்‌ஷி அகர்வால்

சென்னை: விஷ்வா ட்ரீம் வேர்ல்ட் சார்பில் ஆர்.விஜயலட்சுமி மற்றும் செல்லம்மாள், குருசாமி.ஜி தயாரிப்பில், ரஜித் கண்ணா எழுதி இயக்கும் படம், ‘சாரா’. சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா, பொன்வண்ணன், அம்பிகா, யோகி பாபு, ரோபோ சங்கர், ரேகா நாயர் நடிக்கின்றனர். ஜே.லஷ்மண் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக்ராஜா இசை அமைக்கிறார். சினேகன், அருண் பாரதி பாடல்கள் எழுதுகின்றனர்.

இப்படத்தை இளையராஜா தொடங்கி வைத்தார். அப்போது ரஜித் கண்ணா கூறுகையில்:
இக்கட்டான சூழ்நிலையில், தனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த காதலனையா அல்லது தனக்காக வாழ்க்கையையே தியாகம் செய்த நண்பனையா என்று யோசித்து, இறுதியில் ஹீரோயின் யாரைக் காப்பாற்றுகிறார் என்பது கதை. கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் கதை நடக்கிறது, நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கிறது. பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி திரில்லர் படமாக உருவாக்கப்படும் இதில், ஆக்‌ஷன் ஹீரோயினாக சாக்‌ஷி அகர்வால் நடிக்கிறார். இது அவருக்கு திருப்புமுனை படமாக அமையும்’ என்றார்.

The post ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறினார் சாக்‌ஷி அகர்வால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sakshi Agarwal ,Chennai ,Rajith Khanna ,R.Vijayalakshmi ,Chellammal ,Gurusamy.ji ,Vishwa ,World ,Sakshi Aggarwal ,Vijay Vishwa ,Ponvannan ,Ambika ,Yogi Babu ,Robo Shankar ,Rekha Nair ,J.Lashman… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED களரி கற்ற சாக்‌ஷி அகர்வால்