×

மலை கிராமத்து கதையில் பூனம் கவுர்

சென்னை: வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ள ‘எவனும் புத்தனில்லை’ படத்தை எஸ்.விஜயசேகரன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இதில் நபி நந்தி, சரத், சுவாசிகா, சினேகன், வேல.ராமமூர்த்தி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சங்கிலி முருகன், பூனம் கவுர், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, முரு, ஆரு, ‘பசங்க’ சிவகுமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், ‘காதல்’ சரவணன் நடித்துள்ளனர். எஸ்.டி.சுரேஷ் குமார் வசனம் எழுத, ராஜா சி.சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மரியா மனோகர் இசை அமைக்க, சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். 7,130 அடி உயர மலை கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையையும், கல்வி மற்றும் மருத்துவத்துக்காக அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் இப்படம் சொல்கிறது.

The post மலை கிராமத்து கதையில் பூனம் கவுர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,V Cinema Global Networks ,S.Vijayasekaran. ,Nabi Nandi ,Sarath ,Swasika ,Snegan ,Vela ,Ramamurthy ,Rajendran ,Sangi Murugan ,Poonam Kaur ,MS Bhaskar ,Singamuthu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...