×

பான் இந்தியா படமாக மாறிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

சென்னை: ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற படம், தற்போது பான் இந்தியா படமாக மாறியுள்ளது. இப்படத்தின் டீசரை தமிழில் தனுஷ், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி வெளியிட்டனர். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், ‘ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் உருவாகியுள்ளது. எனது இயக்கத்தில் கடந்த 2014ல் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போலவே இப்படமும் ஆக்‌ஷன் கலந்த கேங்ஸ்டர் கதையுடன் உருவாகியுள்ளது. எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பல திருப்பங்கள் நிறைந்த ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல் இப்படமும் டிரெண்ட்செட்டர் படமாக அமையும்’ என்றார். இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம், எஸ்.கதிரேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.

The post பான் இந்தியா படமாக மாறிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Karthik Subbaraj ,Stonebench Films ,Dhanush ,Mahesh Babu ,Dulquer Salmaan ,Rakshit Shetty ,Kollywood Images ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்