×

மீண்டும் பிசியான மகிமா

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள மகிமா நம்பியார், இங்கு மளமளவென்று நிறைய படங்களில் நடித்தார். இந்நிலையில், திடீரென்று அவருக்கு புதுப்பட வாய்ப்பு குறைந்தது. எனவே, பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். தற்போது படிப்பை முடித்துள்ள அவர், மீண்டும் தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து பிசியாக இருக்கிறார். ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடித்துள்ள ‘சந்திரமுகி 2’, விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்துள்ள ‘ரத்தம்’, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ ஆகிய படங்களில் மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

இப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. ‘800’ படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் மதுர் மிட்டல் மனைவி வேடத்தில் நடித்துள்ள அவர், இம்மூன்று படங்களின் வெற்றியை மிகவும் எதிர்பார்க்கிறார். தனது படம் எவ்வளவு பெரிய ஹிட்டானாலும், நியாயமான சம்பளத்தை மட்டுமே வாங்குவேன் என்று சொன்ன அவர், தற்போது நடிக்கும் எல்லா தமிழ்ப் படங்களுக்கும் டப்பிங் பேசுகிறார்.

The post மீண்டும் பிசியான மகிமா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Makima ,Mahima Nambiar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கர்ப்பிணிகளுக்கான பேஷன் ஷோவில் அமலா பால்