×

‘ஜெயிலர்’ வெற்றிவிழா 300 கலைஞர்களுக்கு தங்க நாணயம் பரிசு: கலாநிதி மாறன் வழங்கினார்

சென்னை: ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கினார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சுனில், யோகி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். சிறப்பு வேடங்களில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் நடித்தனர். அனிருத் இசை அமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன், வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது.

இதையொட்டி ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு சொகுசு காரையும், காசோலைகளையும் சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார். இதையடுத்து நடந்த இப்படத்தின் வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய சுமார் 300க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார். பிறகு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

 

The post ‘ஜெயிலர்’ வெற்றிவிழா 300 கலைஞர்களுக்கு தங்க நாணயம் பரிசு: கலாநிதி மாறன் வழங்கினார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jailer' Success Festival ,Kalanidhi Maran ,Chennai ,Rajinikanth ,Sun TV Network ,President ,Kalanithi Maran ,Sun Pictures ,Nelson Dilipkumar ,Tamannaah ,Ramya Krishnan ,Vasanth Ravi ,Vinayakan ,Sunil ,Yogi Babu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சன் டிவி குழும தலைவர் கலாநிதி...