×

ஜெயம் ரவியின் சைரன் பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை: அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் ‘சைரன்’. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் ‘சைரன்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது.

மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி, ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சைரன்’ படத்தின் அப்டேட் ஜெயம் ரவி பிறந்த நாளான இன்று வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி நேற்று நள்ளிரவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

The post ஜெயம் ரவியின் சைரன் பர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Jayam Ravi ,Anthony Bhagyaraj ,Home Movie Makers ,Keerthy Suresh ,Anupama Parameswaran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உடல் எடை அதிகரித்த கீர்த்தி சுரேஷ்