×

வினோத் இயக்கும் படத்துக்காக பயிற்சி தொடங்கினார் கமல்ஹாசன்

சென்னை: வலிமை, துணிவு படங்களுக்கு பிறகு வினோத், தன்னுடைய அடுத்த படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளார். கமல்ஹாசனின் 233வது படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதுதான். கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ‘கல்கி 2898 AD’ படத்திலும், எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் எச். வினோத்தோடு கமல்ஹாசன் இணையும் 233வது படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு முன்பாக இப்படத்துக்காக துப்பாக்கி சுடும் பயிற்சியை கமல்ஹாசன் மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டிரைனிங் வீடியோவிலேயே ரசிகர்களை மிரள வைத்துள்ளார் கமல்ஹாசன். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது.

The post வினோத் இயக்கும் படத்துக்காக பயிற்சி தொடங்கினார் கமல்ஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Vinod ,Chennai ,Mohamad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியன் 2 🔥🔥 Kamal Haasan Speech at Indian 2 Trailer Launch | Shankar | Anirudh | Dinakaran news.