×

கணவரின் டார்ச்சரால் நடிகை தற்கொலை: பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொள்ள, அவரது கணவர் குடிபோதையில் டார்ச்சர் செய்ததுதான் காரணம் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரமனை தளியில் பகுதியைச் சேர்ந்தவர், அபர்ணா நாயர் (33). பிரபல நடிகையான அவர் ‘மேகதீர்த்தம்’, ‘முத்துகவு’, ‘அச்சாயன்ஸ்’, ‘கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல்’, ‘கல்கி’ உள்பட பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மேலும், பல மலையாள டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். அபர்ணா நாயருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று கணவரை விட்டுப் பிரிந்த அபர்ணா நாயர், சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஞ்சித் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அபர்ணா நாயர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் கரமனை போலீசார் விசாரணை நடத்தினர். அபர்ணா நாயரின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அபர்ணா நாயருக்கும், அவரது கணவர் சஞ்சித்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

சஞ்சித்துக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்ததால், அபர்ணா நாயர் பல நாட்கள் மனம் நொந்து காணப்பட்டாராம். இந்நிலையில், சில மாதங்களாக திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சஞ்சித் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் அந்த வேலையையும் அவர் ராஜினாமா செய்துவிட்டார். சம்பவம் நடந்த அன்று இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பயங்கர தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடுமையான மனவேதனையில் இருந்த அபர்ணா நாயர் தற்கொலை செய்திருக்கலாம் என்று, போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

The post கணவரின் டார்ச்சரால் நடிகை தற்கொலை: பரபரப்பு தகவல்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thiruvananthapuram ,Aparna Nair ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவனந்தபுரத்தில் 2 வயது குழந்தை கடத்தல்