×

திருமணம் எப்போது?: தமன்னா பதில்

சென்னை: பாலிவுட் இளம் நடிகர் விஜய் வர்மாவை தீவிரமாக காதலித்து வரும் தமன்னா, அவருடன் இணைந்து ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப்தொடரில் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்தார். முத்தம் மற்றும் பெட்ரூம் காட்சிகளில் அவர்களது நெருக்கத்தைப் பார்த்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்த ரசிகர்கள், அவர் களின் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடைய திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதுகுறித்து தமன்னா கூறியதாவது:

திருமணம் என்ற அமைப்பின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. ஒருகட்டத்தில் நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறேன். ஆனால், தற் போது அதற்கான மனநிலையும் இல்லை. இப்போது சினிமா, விளம்பரம், வெப்தொடர் என்று எனது நடிப்பு வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. எனவே, அதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறேன். விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகின்றன. அதை எல்லாம் அதிக மகிழ்ச்சியுடன் நான் ஏற்று நடித்து வருகிறேன். படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் தற்போது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய இடம். எனவே, அதை நான் நன்கு அனுபவிக்கிறேன். எனவே, இப்போது என் திருமணம் நடக்காது.

The post திருமணம் எப்போது?: தமன்னா பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamannaah ,Chennai ,Bollywood ,Vijay Varma ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில்...