×
Saravana Stores

தியேட்டரை விட்டுவிட்டு ஓடிடிக்கு மாறிவிட்டார்கள்: ரசிகர்கள் பற்றி தமன்னா

மும்பை: இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள தமன்னா, தற்போது வெப்தொடர்களில் கவர்ச்சியாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், இன்றைய ரசிகர்களின் மனநிலை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவரது கருத்துகள் இணையதளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது: சிறுவயதில் இருந்து, பிற்காலத்தில் நான் ஒரு புகழ்பெற்ற சினிமா நடிகையாக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்று, தொடர்ச்சியாக எனது ஒவ்வொரு முடிவும் அமைந்தது. அதுவே இப்போது என்னை இதுபோன்ற உயரிய நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

நான் விரும்பியபடி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததும், எதிர்பாராத சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனினும், வெற்றிகரமான ஒரு நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் உறுதியாக இருந்தது. அதற்காக 100 சதவீதம் கடுமையாக உழைத்தேன். இப்போது, அன்று மனதில் நினைத்ததை மிகப்பெரிய அளவில் சாதித்துவிட்டேன். எனவே, நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஒருகாலத்தில் தியேட்டர்களில் மட்டுமே ரசிகர் கள் படம் பார்த்து ரசித்தனர். இப்போது காலம் மாறிவிட்டது.

ஓடிடி தளங்களில் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமன்றி, சமூக வலைத்தளங்களில் 15 நொடி வரை ஓடக்கூடிய ரீல்ஸ்களை ரசித்துப் பார்த்து மக்கள் பொழுதுபோக்கி வருகின்றனர். அப்படி ரீல்ஸ் பார்த்து ரசிக்கும் மக்களைக் கவர்ந்திழுப்பது என்பது இன்றுள்ள நடிகர், நடிகை களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. அவர்களுக்கு மிகவும் பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டியிருக்கிறது. ரீல்ஸ்கள், எங்களைப் போன்ற நடிகைகளுக்கு மிகப்பெரிய போட்டியாக மாறியிருக்கிறது.

 

The post தியேட்டரை விட்டுவிட்டு ஓடிடிக்கு மாறிவிட்டார்கள்: ரசிகர்கள் பற்றி தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mumbai ,Tamannaah ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பண மோசடி வழக்கில் நடிகை தமன்னாவிடம் ஈடி திடீர் விசாரணை