×

ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்ற தயார்; கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்ற தயார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் செய்தியாளர்களிடம் தகவல் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கூட்டு தலைமை தேவையில்லை என ராகுல் போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டிருக்கிறார். தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்ற லெனின் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் தேசத்தை ஒற்றுமையாக வழிநடத்த முடியும். மத்தியில் 7 ஆண்டுகளாக மட்டுமே ஆட்சியில் இல்லாமல் இருக்கிறோம். இதனால் சோர்ந்து விட வேண்டியது இல்லை. நாம் செய்த தவறுகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அகில இந்திய அளவில் மூத்த தலைவர்கள் சிலர் காங்கிரசுக்கு இரட்டை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த தலைவர்கள் எல்லாம் அதிகாரத்துக்கு வருவதை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். தமிழகம் மட்டும் அல்லாமல் ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன? ஆட்சியை பிடிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி அவர்கள் ஆலோசனை சொல்வதில்லை. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி உள்பட சில இடங்களில் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தி.மு.க. தலைமையிடம் பேசி வருகிறோம். ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்ற தயார் எனவும் அவர் கூறியுள்ளார்….

The post ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்ற தயார்; கே.எஸ்.அழகிரி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Congress ,Raqul Gandhy ,K.K. ,S.S. Anekiri ,Chennai ,Tamil ,Nadu ,Rahaul Gandhy ,K.K. S.S. ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...