×

டியர் ரிலீஸ் எப்போது?

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படம் ‘டியர்’. மேலும் இதில், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

நட்மேக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் தயாரித்துள்ளனர். ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.டியர் படத்தின் படப்பிடிப்பு மற்றும் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

The post டியர் ரிலீஸ் எப்போது? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Prakash Kumar ,Aishwarya Rajesh ,Kali Venkat ,Illasaru ,Rohini ,Thalivasal Vijay ,Geetha Kailasam ,Nandini ,Jagathees Sundaramurthy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாட் ஸ்பாட் டில் 4 ஜோடிகளின் கதை