×

இறுதிகட்டத்தில் ரசவாதி

சென்னை: இயக்குநர் சாந்தகுமார் ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படங்களை தொடர்ந்து, சாந்தகுமார், தற்போது புதிய கிரைம் ரொமான்டிக் திரைப்படமான ‘ரசவாதி’ என்ற படத்தை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படம் கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ‘மௌனகுரு’ மற்றும் ‘மகாமுனி’ படங்களுக்கு பிறகு சாந்தகுமாருடன் மூன்றாவது முறையாக ‘ரசவாதி’ படம் மூலம் எஸ்.எஸ்.தமன் இணைந்து இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இதன் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post இறுதிகட்டத்தில் ரசவாதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Shanthakumar ,Santhakumar ,Arjun Das ,Tanya Ravichandran… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது