×

விஷால்34 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். பிரியா பவானி சங்கர், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) விஷால் தனது 46வது பிறந்த நாளை படக்குழுவினர்கள் உடன் கொண்டாடியுள்ளார். இதோடு இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. மேலும், தமிழகத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் காரைக்குடி. இங்கு படப்பிடிப்பில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என தனது தெரிவித்துள்ளார் விஷால்.

The post விஷால்34 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vishal 34 ,Vishal ,Hari ,Thamirabharani ,Poojai ,Devi Sri Prasad ,Karthik Subpuraj ,Stone Bench Studio ,Zee Studios ,Kollywood Images ,
× RELATED பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள...