×

கொத்தடிமைகளாக இருந்த சிறுவன் உள்பட 11 பேர் மீட்பு

பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம், மண்ணுர் கிராமத்தை சேர்ந்தவர் வேணு. இவர் மரங்கள் வெட்டி விறகுகளாக பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவரிடம், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 11 இருளர்கள் மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு முறையான கூலி வழங்காமல், கொத்தடிமைகளாக நடத்தி வருவதாக, மக்களுக்கான மறுவாழ்வு நல சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது.அதன்பேரில், பெரும்புதூர் ஆர்டிஓ சைலேந்திரன் தலைமையில் வருவாய் துறையினர், பெரும்புதூர் அடுத்த மண்ணூர் ஏரிக்கரை பகுதியில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டு விசாரித்தனர். அதில், சிறுவன் உள்பட 11 பேர் கொத்தடிமைகளாக பணி செய்வது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 11 பேரை மீட்டு, பெரும்புதூர் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைத்தனர். மேலும், சிறுவன் உள்பட 11 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த வேணு என்பவரை கைது செய்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்….

The post கொத்தடிமைகளாக இருந்த சிறுவன் உள்பட 11 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mannoor ,Perumbudur ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED பெரும்புதூர் – வாலாஜா இடையே...