×

பாளை. சிறையில் கைதிகள் மோதல்

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று முன்தினம் இரவு கைதிகள் அனைவரும் உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது விசாரணை கைதியாக உள்ள பேரின்பராஜ் என்பவருக்கும், சக கைதிகளான செல்வமணிகண்டன், ராஜகோபால், பரத் விக்னேஷ் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக் கொண்டனர். இதில் பேரின்பராஜ் காயமடைந்தார். இதுதொடர்பாக ராஜகோபால், மணிகண்டன், பரத் விக்னேஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதேபோல் பாளை. மத்திய சிறையில் கைதிகள் இருதரப்பாக மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக சிறையில் உள்ள கைதிகள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post பாளை. சிறையில் கைதிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellai ,Palayangottai Central Jail ,Parinparaj ,Selvamanikandan ,Rajagopal ,Bharat Vignesh ,
× RELATED நெல்லை பாளையங்கோட்டை சிறையில் மோதல்: 3 கைதிகள் மீது வழக்கு