×

திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்

திருச்சி: ராமநாதபுரம் மாவட்டம் சூரக்கோட்டை ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் கர்ணன்(57). இவர், மலேசியா செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பிறந்த தேதி, இருப்பிடத்தை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது. இதைபோல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த மேலக்காரைக்குடியை சேர்ந்த சித்திரைசாமி(49), திருவாடானை மங்கலக்குடியை சேர்ந்த ஆரோக்கியசாமி(39), சிவகங்கை மாவட்டம் தெற்கு விசலூர் வடக்கு தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன்(48) ஆகியோரது பாஸ்போர்ட்டையும் இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பிறந்த தேதி, இருப்பிடத்தை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் இவர்கள் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரும் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Trichy airport ,Ramanathapuram, Sivagangai ,Trichy ,Karnan ,Sriram Nagar, Surakottai, Ramanathapuram district ,Ramanathapuram, ,Sivagangai ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...