×

நான் சினிமாவில் நடிக்கவே தகுதி இல்லன்னு சொன்னாங்க: சந்திரமுகி 2 விழாவில் வடிவேலு உருக்கம்

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘சந்திரமுகி 2’. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு, ராதிகா நடித்து இருக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்
பதிவு செய்ய, எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். தமிழுக்கு மதன் கார்க்கி, தெலுங்கிற்கு சைதன்ய பிரசாத் பாடல்கள் எழுதினர். பி.வாசு இயக்கியுள்ளார். இது அவரது 65வது படம். வரும் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ராகவா லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளைக்கு சு.பாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

அப்போது வடிவேலு பேசும்போது, ‘ரசிகர்களை நேர்ல பார்க்கிறப்ப என் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சா பறந்துடும். அவங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம். மறுபடியும் நடிக்க வந்திருக்கும் எனக்கு ‘மாமன்னன்’ பெரிய வெற்றி கொடுத்தது. எனது அடுத்த வெற்றிப்படமா ‘சந்திரமுகி 2’ இருக்கும். அதுல பார்த்த வடிவேலு வேற. இதுல நீங்க பார்க்கப்போற வடிவேலு வேற. கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னை இங்க வரவிடாம கதவுக்கு பூட்டு போட்டு, சாவியை தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்னு எல்லாருக்குமே தெரியும்.

அந்த கதவை உடைச்சு, புது சாவியை கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வெச்சவர் என் அண்ணன் சுபாஸ்கரன்.மாமன்னன்’ படத்தை முடிச்ச பிறகு பி.வாசு சார் என்னை கூப்பிட்டார். அவரு படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ‘சந்திரமுகி 2’ கதையை மூணு மணி நேரம் சொன்னார். யார்கிட்டேயும் அவரு கதை சொல்லாம, ஒன்லைனை மட்டும்தான் சொல்வார். இப்ப சொன்ன கதையை கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன். ‘சந்திரமுகி’ முதல் பாகத்துல வந்த முருகேசனாதான் ரெண்டாம் பாகத்திலும் வர்றேன். இந்த முருகேசன் என்ன பாடுபடப் போறார்னு படத்துல பார்த்து ரசிக்கலாம்’ என்றார்.

The post நான் சினிமாவில் நடிக்கவே தகுதி இல்லன்னு சொன்னாங்க: சந்திரமுகி 2 விழாவில் வடிவேலு உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chandramukhi 2 festival ,Chennai ,Pan ,India ,Subhaskaran ,Lyca Productions ,Raghava Lawrence ,Kangana Ranaut ,Vadivelu ,Radhika ,RD Rajasekhar ,MM Keeravani ,Madan Karki ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 13 மொழிகளில் வெளியாகும் மார்டின்;...