×

ரோபோ சங்கரால் குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன்: விமல் உருக்கம்

சென்னை: விமல் நடிப்பில் தற்போது ‘துடிக்கும் கரங்கள்’ என்ற படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய விமல், ‘ரோபோ சங்கரின் உடல்நிலையை பார்த்து நான் உள்பட பலர் குடிப்பதையே நிறுத்திவிட்டோம்’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் சாவு பயத்தை காட்டி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதாவது ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பாக கடுமையான உடல் நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

மஞ்சள் காமாலையின்போது அவர் அதிகமாக மது குடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த விழாவில் வெளிப்படையாக பேசிய ரோபோ சங்கர், குடிப்பழக்கத்தினால் தனக்கு எந்த அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிவித்தார்.தொடர்ந்து விமல் கூறும்போது, ‘நான் சரக்கடித்தே 45 நாட்கள் ஆகிவிட்டது. அந்த வகையில் ரோபோ மாமா தான் என்னை போன்ற பலர் மாறுவதற்கு காரணமாக இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

The post ரோபோ சங்கரால் குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன்: விமல் உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vimal Urukkam ,CHENNAI ,Vimal ,Robo Shankar ,Kollywood Images ,
× RELATED குடும்பம் நடத்த வா… இல்லை விவாகரத்து...