×

உலக சாதனையாளருக்கு எம்எல்ஏ பாராட்டு

 

பேராவூரணி, ஜூலை 22: பேராவூரணியில் சிரசாசனத்தில் உலக சாதனை புரிந்த யோகாலய நிறுவனரை எம்எல்ஏ அசோக்குமார் பாராட்டினார் . தஞ்சாவூர் மாவட்ம், பேராவூரணி கேகே நகரில் உள்ள திருமூலர் யோகாலயத்தின் நிறுவனர் விமல் ஆசனங்களின் அரசன் என்று அழைக்கப்படும் சிரசாசனத்தை அண்மையில் 40 நிமிடங்கள் 5 வினாடிகள் இடைவிடாது பொதுமக்கள் மற்றும் இன்டர்நேஷனல் பிரைடு வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் முன்பாக இருந்து, இதற்கு முன்னால் இருந்த உலக சாதனையை முறியடித்தார். இதையடுத்து உலக சாதனை படைத்த திருமூலர் யோகாலயத்தின் நிறுவனரான விமலை, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது முடச்சிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்ராகிம்ஷா, ஊராட்சி மன்ற துணை தலைவர் நீலகண்டன்,காளிமுத்து, சுந்தரராசு ஆகியோர் உடனிருந்தனர் .

The post உலக சாதனையாளருக்கு எம்எல்ஏ பாராட்டு appeared first on Dinakaran.

Tags : MLA ,Peravoorani ,Ashokumar ,Sirasasana ,Vimal ,Thirumoolar Yogalayam ,Thanjavur Maavatm ,KK ,Nagar ,
× RELATED ₹25.22 லட்சத்தில் அங்கன்வாடி மையம் பொன்னுசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்