×

கடைசி விவசாயிக்கு தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் நெகிழ்ச்சி

சென்னை: மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மறைந்த நடிகர் நல்லாண்டிநடித்த ‘கடைசி விவசாயி’படத்துக்கு 2 தேசிய விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: ‘கடைசி விவசாயி’ படத்தில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டிக்கும், இப்படத்தினை உருவாக்க மிகப்பெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த விஜய்சேதுபதி புரொடக்‌ஷன் மற்றும் 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்களுக்கும்,

இந்த படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த விஜய் சேதுபதிக்கும், சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, ‘கடைசி விவசாயி’ படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இதுபோல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது.

The post கடைசி விவசாயிக்கு தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Manikandan Leschi ,Chennai ,Vijay Sethupathi ,Manikandan ,Nallandi ,Paryaam ,Kollywood Images ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...