×

அக்டோபர் 11ல் மார்ட்டின் ரிலீஸ்

பெங்களூரு: கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் ‘மார்ட்டின்’ படம் அக்டோபர் 11ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் ேக. மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்ட படைப்பாக ‘மார்ட்டின்’ படத்தைத் தயாரித்து வருகின்றனர்.

ஏபி.அர்ஜுன் இயக்குகிறார். கதை, திரைக்கதையை நடிகர் அர்ஜுன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். டோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைத்துள்ளார், மேலும் கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார்.

The post அக்டோபர் 11ல் மார்ட்டின் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Martin ,Bengaluru ,Prince Dhruva Sarja ,Vasavi Enterprises ,Udai ,Ek ,Mehta Productions ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கதை,...