×

ஹீரோ ஆனது எப்படி?.. விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா

சென்னை: ‘ஹிட் லிஸ்ட்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இது குறித்து விஜய் கனிஷ்கா கூறியது: சிறு வயதில் அப்பாவுடன் படங்கள் நிறைய பார்ப்பேன். பள்ளி, கல்லூரிகளில் மேடை ஏறி நடிக்க ஆரம்பித்தேன். நடனம் ஆடுவேன். அதுவெல்லாம் எனக்கு நடிப்பின் மீதுதான் ஆசையை அதிகப்படுத்தியது. நானும் அப்பாவும் படம் பார்க்கும்போது அப்பா அதை டைரக்டர் பார்வையில் பார்ப்பார். நான் நடிகர்களின் நடிப்பை கவனிப்பேன். நடிக்கும் ஆசையை அப்பாவிடம் சொன்னபோது, முதலில் ஒரு டிகிரி முடித்துவிட்டு நடி என்றார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சார் என்னை தனது சொந்த படத்தில் அறிமுகப்படுத்திவிட்டார். இந்த படத்தை அவரது உதவி இயக்குனர்கள் சூரிய கதிர்-கார்த்திகேயன் இணைந்து இயக்கியுள்ளனர். ‘ஹிட்லிஸ்ட்’ முழுநீள ஆக்‌ஷன் திரில்லராகும். இதில் நிறைய டிவிஸ்ட்கள் இருக்கும். சரத்குமார் சார், சித்தாரா, சமுத்திரக்கனி, கவுதம் மேனன், ஐஸ்வர்யா தத்தா, ஸ்ருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஐடியில் பணிபுரியும் இளைஞனாக வருகிறேன். எந்த வம்பு தும்புக்கும் போகாத ஒருவன் திடீரென பிரச்னை ஒன்றில் சிக்கும்போது என்ன நடக்கும் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் இது.

முதல் படத்திலேயே ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கலாமா என்றெல்லாம் பலர் டிஸ்கரேஜ் செய்தனர். ஆனால் முறைப்படி பாண்டியன் மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சி பெற்று களத்தில் இறங்கியுள்ளேன். அதேபோல் கலைராணி மேடமிடம் நடிப்பையும் ஸ்ரீதர் மாஸ்டரிடம் நடனத்தையும் கற்றேன். என்னை நம்பியும் படத்துக்காக பட்ஜெட் பற்றி யோசிக்காமல் செலவு செய்தும் கே.எஸ்.ரவிக்குமார் சார் படத்தை தயாரித்துள்ளார். அவருக்கு வெற்றியை சமர்ப்பிக்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறேன். இவ்வாறு விஜய் கனிஷ்கா கூறினார்.

The post ஹீரோ ஆனது எப்படி?.. விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vikraman ,Vijay Kanishka ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்