×

கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல

 

சென்னை: ‘மாமன்னன்’ படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் வடிவேலு. பலர் அவரை ஆதரித்த நிலையில் சிலர் விமர்சித்தும் இருந்தனர். இது குறித்து வடிவேலு கூறியதாவது: என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் தெய்வமாக மதிப்பது ராஜ்கிரண் அய்யா மற்றும் கமல் சாரை தான். ராஜ்கிரண் அய்யா தான் என் திறமையைக் கண்டுபிடித்து வாய்ப்புக் கொடுத்தவர். சினிமாவில் நல்லதை விட கெட்டது அதிகம் இருக்கும். இது பற்றி கமல்சாரிடம் ஒருமுறை கேட்டேன். ‘கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாக இருக்கிறதே’ என்றேன்.

அதற்கு அவர், ‘அதெல்லாம் நிறைய வரும். அதையெல்லாம் தாண்டி நீ நடிச்சு மேலே வா’ என்றார். நான் திரும்ப நடிக்க வந்த போது, என்னை விமர்சனம் செஞ்ச யாரையும் இப்போ காணோம். தொழிலை நேசிச்சா எங்கேயும் தோற்க மாட்டோம். ஃபஹத் ஃபாசிலோட ‘மாரீசன்’ படத்துல நடிச்சிருக்கேன். இதுக்காக நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்றார் வடிவேலு.

The post கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vadivelu ,Chennai ,Rajkiran ,Kollywood Images ,
× RELATED ‘96’ பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் மெய்யழகன்