×

விஜய்க்கு ஜோடியாகும் பிரியங்கா

சென்னை: விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வெந்து தணிந்தது காடு, கேப்டன் மில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் சித்தார்த் நுனி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதில் தந்தை, மகனாக இரண்டு வேடங்களில் விஜய் நடிக்க உள்ளாராம். தந்தை விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க தேர்வாகியுள்ளார். மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார். டான், டாக்டர், எதற்கும் துணிந்தவன் படங்களில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்போது ஜெயம் ரவி ஜோடியாக ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஜோடியாக கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார். அவருக்கு இப்போது விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தீபாவளிக்கு பிறகு தொடங்க உள்ளது. படத்துக்கான போட்டோ ஷூட் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் விஜய், பிரியங்கா மோகன் பங்கேற்கிறார்கள். இந்த படத்தில் காமெடி கேரக்டரில் பிரேம்ஜி, யோகி பாபு நடிக்க உள்ளனர்.

The post விஜய்க்கு ஜோடியாகும் பிரியங்கா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Priyanka ,Vijay ,Chennai ,Priyanka Mohan ,Venkat Prabhu ,Yuvan Shankar Raja ,Siddharth Nuni ,Vendu Tananthu Kadu ,Captain Miller ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை